Wednesday, October 16, 2024
Homeசினிமா2000 Tamil Movies | சினிமா Untold Story ! | Part 8

2000 Tamil Movies | சினிமா Untold Story ! | Part 8

2000 Tamil Movies-அடுத்த கட்டம்

2000 Tamil Movies ல் பல புதுவித முயற்ச்சிகள் கைவிடப்பட்டன. உதாரணமாக

  • தமிழின் முதல் ஏலியன் படம் “கலைஅரசி”

MGR நடித்த திரைப்படம்’

  • தமிழின் முதல் ரோபோட்டிக் திரைப்படம் ” சிவன்”
  • தமிழின் முதல் பாடலே இல்லாத படம் “ஏர்போர்ட்”

2000 Tamil Movies

இப்படி பல முயற்ச்சிகள் தோற்றுப்போனதால் புதுவிதமான கதையை எடுக்க ஆசைப்பட்ட பலர் அதை அப்படியே புதைத்துவிட்டனர்.

சத்யராஜ், சரத்குமார் போன்றோர் 2000 ஆண்டுக்கு பின் தோல்வியை சந்திக்க தொடங்கினர்.

  • சரத்குமாரின் ஏய், சாணக்யா இரண்டுபடங்களும் ஒரே கதை.

மாதவன் தனக்கு கிடைத்தவாய்ப்பை சரியாக பயன்படுத்திகொண்டார். இதில் குறிப்பிடத்தகுந்த ஒன்று கமல் மட்டும் புதிய முயற்ச்சிகளை செய்ய ஆரம்பித்தார்.

குணா, மகாநதி,படங்களை தொடர்ந்து பாட்ஷா பட இயக்குனரான சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான படம் ஆளவந்தான். இதன் விளம்பரமே விண்ணை முட்டும் அளவுக்கு கொடுக்கப்பட்டது. கமலின் மிரட்டலான புகைப்படத்தைபார்த்து மக்கள் இப்படத்தை அதிகம் எதிர்பார்த்தனர். ஆனால் படம் படுதோல்வி. படம் முழுக்க புது முயற்சி. இரண்டு கமலும் சந்திக்கும் ஒரு காட்சியில் கேமரா சுற்றி சுற்றி வரும். முதன் முறையாக Multi Shot Camera வை தமிழுக்கு கொண்டுவந்தார் கமல்.

prabhudevaa

ஏனோ இந்தப்படம் தோல்வி. ஆனாலும் கமல் தனது முயற்ச்சியை கைவிடவில்லை. அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம், அன்பேசிவம் இவர் பெயர் சொல்லும் படங்கள்.

ஆனால் superstar அப்பொழுதும் மசாலா படங்களிலேயே கவனம் செலுத்தினார். அதன் விளைவாக மிகபெரிய அடி ரஜினிகாந்த்க்கு விழுந்தது. “பாபா” படம். தன்னை ஒரு கடவுளாகவே சித்தரித்துகொண்டார். என்ன கதை என்றே தெரியாமல் செல்லும் படம். இதுவும் இயக்கம் சுரேஷ்க்ரிஷ்னா.

போங்கடா இனிமே நாங்க இருக்கோம் என்று புது இயக்குனர்கள் வர தொடங்கினர். ஆனால் சேரன் மட்டும் சிறந்த இயக்குனராகவே பார்க்கபட்டார். அவர் படம் அப்படி.

தேசியகீதம் படம் முதல் ஆட்டோகிராப் படம் வரை அவர் புகழ் உச்சத்தில் இருந்தது. கெளதம் மேனன் மட்டும் மணிரத்னம் சாயலில் படம் எடுக்க தொடங்கினார்.

அந்நேரத்தில் இவர்கள் எங்கு இருந்துவந்தார்கள் என வியக்கவைத்த விக்ரம் and பாலா தமிழ் சினிமாவின் TREND யே மாற்றினர். விஜய் தனக்கே உண்டான துள்ளல் நடிப்புடன் action காட்சிகளில் நடிக்க ஆரம்பித்த நேரம் பகவதி தோல்வி ஆனாலும் விடவில்லை. இந்த ஆண்டுகளில் புது முயற்ச்சிகள் கை விடப்பட்டதே தவிர புது கதைகள் கைவிடப்படவில்லை.

To be Continue

இதன் முந்தய பாகம் படிக்க : Part 7

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments