2000 Tamil Movie

2000 Tamil Movies | சினிமா Untold Story ! | Part 7

2000 Tamil Movies ஒரு பார்வை

2000 Tamil Movies ஆரம்பிக்கும் தருணம் பல முன்னணி கதாநாயகர்கள் ஒதுங்கி கொண்டனர். இயக்குனர்களும் கூட.

பிரசாந்த், மாதவன், விஜய், அஜித், அப்பாஸ், ஷியாம், ஸ்ரீ காந்த் போன்றோர் அடுத்த கட்ட தமிழ்சினிமாவில் காலடி எடுத்து வைத்தனர்.

அஜித்தின் ஆரம்ப படங்களில் சத்யராஜ், பிரசாந்த் போன்றோர் இணைந்து நடித்து அஜித்தின் நாயகன் பட்டதை தக்கவைக்க உதவினர். 2000 ம் ஆண்டில் வெளிவந்த விஜயின் குஷி படம் புதிய ரசிகர்களையும் கவர்ந்தது எனலாம். அதற்க்கு பின் விஜய் படங்கள் அனைத்தும் கல்லூரி மாணவர்களால் அதிகம் ரசிக்கப்பட தொடங்கின. விஜய்க்கு போட்டியாக வந்துகொண்டு இருந்தவர் நடிகர் பிரசாந்த்.

கண்ணதிரே தோன்றினாள், ஜீன்ஸ் படங்கள் மூலம் முன்னணி கதாநாயகனாக இடம் பிடித்த பிரசாந்த்,

தொடர்ந்து காதல் கதை சார்ந்த படங்களை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்தார்.

அதுவரை மசாலா படங்களையே பார்த்து வந்த ரசிகர்களுக்கு 2000 ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழ் சினிமாவில் நடந்த மாற்றம் மாறுதலை கொடுத்தது. காதல் அழிவதில்லை படத்தின் மூலம் சிம்பு திரைத்துறையில் கதாநாயகனாக காலடி எடுத்து வைத்தார். ஆனால் எதிர்பார்த்தவெற்றி அமையவில்லை. எந்த அளவுக்கு சொதப்ப முடியுமோ அந்த அளவுக்கு சொதப்பினார்.

T. ராஜேந்திர் என்ற இயக்குனர் தன் மகனை கதாநாயகனாக அறிமுகப்படுத்த காரணம் பாரதிராஜா தன் மகன் மனோஜை ஹீரோவாக நடிக்க வைத்துதான். தாஜ்மஹால் என்ற படம் திரைக்கதையில் நன்றாக இருந்தாலும். படம் குப்பை என்றே விமர்சிக்கப்பட்டது. AR ரஹ்மான் போட்ட இசைமட்டுமே ஹிட் ஆனது. ஆனாலும் மனோஜ்க்கு சினிமா வாய்ப்புக்கள் தேடி வந்தன. அதை அவர் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை.

அப்பு, குட்லக், அலைபாயுதே, கண்ணுக்குள் நிலவு, முகவரி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், பார்த்தேன் ரசித்தேன் போன்ற படங்கள் பட்டிதொட்டியெங்கும் வெற்றிபெற்று மக்களை கட்டிபோட்டது

மின்னலே படத்தின் மூலம் AR ரஹ்மான்யே ஓரங்கட்ட ஒருவர் வந்துவிட்டார் என இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜை புகழ்ந்தன ஊடகங்கள், படம் வெளியாவதற்கு முன்பே பாடல்கள் ஹிட்அடித்தன, படமும் மாதவன்க்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. தொடர்ந்து வந்த சில படங்கள் மட்டும் மாதவன்க்கு வெற்றியை கொடுத்தன.

விஜயகாந்த்திற்கு நரசிம்மா, பார்திபன்க்கு நீ வருவாய் என, கார்த்திக்கு குபேரன் போன்ற படங்கள் ஓரளவுக்கு வெற்றிபெற்றன.

இந்த காலகட்டத்தில் கார்த்திக் மற்றும் விஜயகாந்த், சரத்குமார், முரளி போன்றோர் தங்களை சினிமாவில் நிலைநிறுத்திக்கொள்ள அவ்வபோது சில வெற்றிப்படங்களை கொடுத்தனர்.

சாமி படங்களின் வருகை குறைய ஆரம்பித்த நேரம் அது பேய் படங்களின் வருகையும் குறைந்தது.

பிரபுதேவா வெற்றிகரமான நாயகனாக உலா வர தொடங்கியதால் நடனம் சார்த்த படங்கள் அதிகம் வந்தன, அல்லது நாயகர்களுக்கு நடனம் ஆட தெரியவேண்டும் என எழுதபடாத விதி உருவானது

பிரபுதேவாவின் ஏழையின் சிரிப்பில், டபுள்ஸ், பெண்ணின் மனதை தொட்டு போன்ற படங்கள் குடும்பங்களை அதிகம் ஈர்த்தது எனலாம். ஆனால்?

மேலும் தகவலுக்கு : Part 6

Leave a Comment Cancel Reply