Director of Tamil Movies
Tamil Movies என்ற ஏரியாவில் பல முன்னணி மற்றும் புதுமுக நாயகர்கள் கொடிகட்டி பறக்க தொடங்கிய காலகட்டம் 2005க்கு மேல்தான்.
இவங்கெல்லாம் பழைய பீஸ்ப்பா என டப்பா இயக்குனர்களையும், மொக்கை நடிகர்களையும் ரசிகர்கள் தூக்கி போட்டனர். ஷங்கர் என்ற மனிதர் உலகம் முழுக்க தெரிந்தது சிவாஜி என்ற படத்தில்தான்.
கமல் மீண்டும் மீண்டும் புதிய முயற்ச்சிக்கான தோல்விகளை சந்திதுகொண்டே இருந்தார். நீண்ட நாளைக்கு பின் வேட்டையாடு விளையாடு மிக பெரிய வசூல். கௌதம்மேனன் புதிய களத்தில் கண்ட வெற்றி.
அதற்கு பின் வெளிவருகிறது தசாவதாரம். பிரம்மாண்ட பொருட்செலவில் மிக பெரிய முயற்சி. படம் வெற்றி. மேற்கொண்டு அறிவியல் சார்ந்த படங்கள் அதிகம் வர தொடங்கின.
விஜய் அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ், மாதவன், போன்றோர் உச்சகட்ட நாயகர்களாக வலம் வர தொடங்கினர்.
மன்மதன், வல்லவன் படத்திற்கு பின் அதுபோன்ற success இன்றுவரை சிம்புவுக்கு எட்டா கனியாக உள்ளது.
தனுஷ் தன்னைத்தானே மெருகேற்றிக்கொண்டு ஒவ்வொரு படத்திற்கும் தன்னால் ஆனா முயற்ச்சியை மேற்கொள்ள தொடங்கினார்,
இவர்களுக்கு நடுவில் விஷால் போன்ற நடிகர்களும் action காட்சிகளில் பின்னி பெடல் எடுத்துகொண்டு இருந்தனர். விஜய்க்கு action படத்திற்கான விசிடிங் கார்டு கொடுத்தது திருமலை படம். அப்படத்தை இயக்கிய ரமணா அடுத்ததாக தனுஷை வைத்து சுள்ளான் படத்தை கொடுத்தார்.படம் சொல்லிகொல்லும்படி வெற்றி இல்லை. அடுத்ததாக இயக்கிய ஆதி மிகபெரிய சறுக்கல். அதில் இருந்து ரமணா சினிமாவை விட்டே வெளியேறி விட்டார்.
இப்படி முதல் படம் இரண்டாம் படம் வெற்றி கண்ட இயக்குனர்கள் அதற்குபின் காணாமல் சென்றனர்.
இயக்குனர் பேரரசு விஜய், அஜித், விஜய்காந்த், அர்ஜுன் என வரிசையாக நாயகர்களை வைத்து படம் எடுத்து இன்று ஒரு மூலையில் கதைக்காக அமர்ந்துள்ளார்.
ஆனால் சிலர் மட்டும் தன் திறமையால் இன்றும் முன்னணியில் இருக்கிறார்கள் உதாரணம் AR.முருகதாஸ். வேறு இயக்குனர்கள் பெயர் தெரியவில்லை. இருந்தால் Comment-ல் தெரிவிக்கவும்,
90 களில் தமிழ் சினிமாவை கலக்கிய இயக்குனர் வசந்த் இந்த காலகட்டத்தில் காலூன்ற முடியவில்லை. நடிகர் பிரபுதேவா திடிரென இயக்குனர் அவதாரம் எடுத்தார். போக்கிரி பட்டிதொட்டி எங்கும் ஹிட். அடுத்து வந்த வில்லு ஆழமான தொட்டியில் விழுந்துவிட்டது. முதல் காட்சி என்ட்ரியே அதிரிபுதிரி ரகம். அங்கே இருப்பவர்கள் துணியை காயபோட்டு இருக்க ஒரு பெண்ணை காப்பாற்ற காற்றில் பறந்து வந்து காயபோட்ட துணியில் மோதி அனைத்து துணியும் விஜய் உடம்பில் சுற்றி இருக்க. எங்கே போவது என தெரியாமல் தேமேவென வந்து நிற்கிறார். பரிதாபபட்டு வில்லன் விஜய் முகத்தில் சுற்றி இருக்கும் துணியை எடுக்க வர. கொஞ்சம் கூட நன்றி இல்லாமல் வில்லனை அடித்து 7 ஊர் தாண்டி அனுப்புகிறார். இதுபோன்ற அபத்தமான காட்சிகள் 80 களிலேயே மலை ஏறிவிட்டது. மக்கள் மாறிவிட்டனர்.
இன்று தமிழ் சினிமா உலகளவில் தன் பயணத்தை தொடந்துகொண்டு உள்ளது.
வாசகர்களுக்கு வேண்டுகோள்: இந்த சினிமா Untold Story தொடர் இதோடு முடிவடைகிறது. வாசகர்களுக்கு வேண்டுமாயின் எங்களுக்கு தெரிவிக்கவும்.
நன்றி
இதன் முந்தைய பாகம் படிக்க : Part 9