Nerkonda paarvai Movie
மிகுந்த எதிர்பார்ப்பில் இன்று வெளியாகி இருக்கும் படம் அஜித் நடிப்பில் H.வினோத் இயக்கத்தில் நேர்கொண்டபார்வை.
என்னதான் ஹிந்தியில் வந்த PINK படத்தின் தழுவலாக இருந்தாலும் அஜித் படத்திற்கே உண்டான மாஸ் opening இதற்கும் இருந்தது.
பெண் சுதந்திரம் என்றவார்த்தையை தவறாக பயன்படுத்தும் பெண்களின் செயல்கள் எல்லை மீறினால் அவர்களை எங்கு கொண்டுபோய் விடும் என்ற கதைதான். அவர்களை காப்பாற்ற வரும் ஒரு வக்கீல். கடைசியில் என்ன நடந்தது.
இதை ஹிந்தி படத்தில் இருந்த காட்சிகளோடு ஒப்பிட முடியாது. அஜித்க்கு என்றே சில காட்சிகள் வைக்கப்பட்டு உள்ளன. ரசிக்க கூடியதாகவும் இருக்கிறது. அந்த சண்டைகாட்சி ஒன்று போதும்.
கோர்ட்டில் நடக்கும் ஒவ்வொரு காட்சியும் அதன் வசனங்களும் வேறு லெவல் ரகம்.
வித்யாபாலன் வரும் காட்சிகள் மிக அருமை. யுவன் ஷங்கர் ராஜா இசை தனித்து தெரிகிறது. மீண்டும் comeback-ஆ?
படத்தின் நீளத்தை ரொம்பவும் நீளமாக அமைத்ததுதான் இதம் மைனஸ். சில காட்சிகள் மெதுவாக நகர்வதுபோல் தோன்றுவது ஏனோ தெரியவில்லை. ஆனால் சில இடங்களில் விசில் அடித்து பார்க்கலாம்.
வேறு ஒரு அஜித்தை இதில் நிச்சயம் பார்க்கலாம். கேமரா work சூப்பர்.