Lion King Movie Review
Lion King Movie – “லயன் கிங்” உலக அளவில் பிரம்மாண்டமாக இன்று வெளியாகி இருக்கும் படம். இயக்குனர் ஜோன் பாவ்ரியு இயக்கி இருக்கும் மற்றுமொரு படம்.
இதற்க்கு முன் இவர் இயக்கிய The Jungle Book போன்ற படங்கள் நல்ல வரவேற்ப்பை பெற்று தந்தன.
ஏற்கனவே தெரிந்த கதைதான். கூட்டத்துக்குள் ஏற்படும் கழகத்தில் சிம்பா நாடு கடத்தப்படுகிறான். அங்கு வரும் புது புது நண்பர்களுடன் ஆபத்தை எப்படி எதிர்கொள்கிறான் என்பதே. ஆனால் திரைக்கதையில் ரசிக்க வைத்துள்ளார் இயக்குனர். CG போலவே தெரியவில்லை அதில் வரும் ஒவ்வொரு விலங்கும். “நம்ம ஊருக்கும் கொண்டு வாங்கப்பா”
TV-யில் நாம் பார்த்து ரசித்த Timon and Pumbaa வை மறுபடி கொண்டுவந்து இருப்பது மிக சிறப்பு. சிம்பாவின் நம்மை சிரிக்க வைக்கவும், சோகமாக்கவும் தவறவில்லை.
ஒரு அனிமேஷன் படத்தில் இதுபோன்ற செண்டிமெண்ட் காட்சிகளை கொண்டுவருவது சாதாரண விஷயம் அல்ல.
250 மில்லியன் பட்ஜெட்ட்டில் எடுத்து இருப்பது சிறப்பு. ஆனாலும் சில காட்சிகளை நீக்கி இருக்கலாம் தேவையில்லாமல் திணித்துஇருப்பதுபோல் இருக்கிறது. பின்னணி இசை சூப்பர் ஹின்ஸ் ஜிம்மர்தான் இசை “Inception, Dark Knight, Gladiator” படங்களுக்கு இசையமைத்தவர்.
சில காட்சிகள் Goosbooms ரகம். அதற்க்கு ஏற்ற பின்னணி இசை அதிரிபுதிரி கதகளி.
1994 ல் வந்த Lion King படத்தின் சாயல் இல்லாமல் அமைத்த காட்சிகள் நன்று.இயக்குனருக்கு பாராட்டுக்கள். ஆனால் கொஞ்சம் வேகமாக காட்சிகள் நகரும்படி இருந்திருக்கலாம்.
குழந்தைகள் ரசித்து பார்ப்பார்கள் என்றுமட்டும் தெரிகிறது. பெரியவர்களும் பார்க்கலாம் நன்றாகத்தான் இருக்கும்.
Last But Not List – Action காட்சிகள் அருமை.
Rating : 4.1/5
மேலும் – விமர்சனம்