Wednesday, October 16, 2019

Comali Movie Review | கோமாளி விமர்சனம்

Tamil Movie

Comali Movie

ஆகஸ்ட் 15- சுதந்திர தினத்தன்று சுதந்திரமாக வெளியாகி இருக்கும் திரைப்படம் ஜெயம்ரவி காஜல் அகர்வால் நடிப்பில். புதுமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் “கோமாளி”

முதலில் கதைக்கு தனி பாராட்டுக்கள் தெரிவிக்க வேண்டும். எப்போதாவது ஒருதடவைதான் இதுபோல சுவாரஸ்யமான கதைகள் திரைப்படமாக மாறும்.

கதை இருந்தாலும் நல்ல நடிகர்கள் கிடைப்பதில்லை (over Actingல் சொதப்பி விடுவார்கள்.)
இதை கேட்டு நடித்த ஜெயம்ரவிக்கு பாராட்டுக்கள். நல்ல நல்ல கதைகளை என்றமே தைரியமாக தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களில் ஜெயம்ரவி முக்கியமானவர்.

16 வருடம் கோமாவில் இருந்துவிட்டு திடிரென கண்முழிக்கிறார் ஜெயம்ரவி. காணாமல் போன 16 வருடத்தை தேட முற்படுகிறார். கால மாற்றத்தை எப்படி எதிர்கொள்கிறார் என்பதை நகைச்சுவை காட்சிகள் மூலமாகவும், சமூக அக்கறையுடனும் எடுத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

இது முழுக்க முழுக்க 90 Kids காண படம் மட்டுமே. 90களில் பார்த்த இன்று பார்க்கமுடியாத இழந்துவிட்ட சில விஷயங்களை நம் கண்முன் கொண்டுவருவது மிக சிறப்பு.

ஒளியும் ஒலியும் சாங்கிற்கு தியேட்டர்ரே விசில் அடிக்கிறது. இன்னும் பல காலத்திற்கு அந்த சாங் எல்லோர் மனதிலும் நிற்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஹிப்ஹாப் தமிழாவிற்கு வாழ்த்துக்கள்.

தன் படத்திற்கு மட்டும் பில்டப் மியூசிக் போடாமல் இதற்கும் போட்டதற்கு அதுவும் தேவையான அளவிற்கு.

ஜெயம்ரவி 15 கிலோ குறைத்து வரும் பள்ளிகூட காட்சிகள் சுவை. காதல் காட்சிகள் மற்றும் அவர் வசனங்களும் அருமை. ஆனால் ஏதோ குறைகிறது அந்த காட்சிகளில்.

அவர் எப்படி கோமாவிற்கு போனார் என்பதை இன்னும் கொஞ்சம் ஆழமாக சொல்லி இருக்கலாம்.

மற்ற படங்களை போல் இல்லாமல் இதில் யோகிபாபு தனித்து தெரிகிறார். ஹீரோவுடனே பயணிக்கும் கதாபாத்திரம். சில இடங்களில் கைதட்டல் பெறுகிறார்.

காஜல் அகர்வால் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். ஆங்காங்கு அவர் காட்டும் Reactionகள் சூப்பர்.

ஹாலிவுட் படத்தின் “Kick it old schoolபடத்தின் கதைதான் இது. திரைக்கதையில் கொஞ்சம் மாற்றம் செய்து தந்துள்ளது. அருமை.

ஜாலியாக பார்க்கலாம்

Rating : 4/5 

Next Review

Related Posts

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *