Saturday, November 30, 2024
Homeசினிமாசினிமா! | A Untold Story of Tamil Cinema | Part 3

சினிமா! | A Untold Story of Tamil Cinema | Part 3

சினிமாவின் வளர்ச்சி Part 3

90 களின் காலகட்டம் சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. மேலும் பல புது புது முயற்சிகள் அரங்கேற தொடங்கின. நடிகர்களில் கார்த்திக், சத்யராஜ்,சரத்குமார்,விஜயகாந்த்,ரஜினிகாந்த்,கமலஹாசன்,முரளி போன்றோர் வெற்றிவாகை சூடினர்.

கமல்ஹாசன் புது முயற்ச்சிகளை தனது படங்களில் புகுத்தி நடிப்பில் வேறு பரிமாணத்தை காட்டிக்கொண்டு இருந்தார்.

  • இந்தியாவில் எடுக்கப்பட்ட முதல் 4 Role on Screen Movie “மைக்கல் மதன காம ராஜன்” 

tamil cinema 80

ரஜினிகாந்த் பஞ்ச் வசனங்கள் பேசி பறந்துகொண்டு இருந்த நேரத்தில், நவரச நாயகன் கார்த்திக் படங்கள் பாடல்களால் மக்களை மகிழ்வித்தன. ஆனால் பல ரசிகர்களின் தேர்வு விஜயகாந்த் படங்கள்.

ஏய்…..என்று ஒரு சத்தம் போட்டால்போதும் பெரிய பெரிய போலிஸ்கூட பயந்து நடுங்கிவிடும். சத்யராஜ் தனது தனிப்பட்ட லொள்ளு வசனங்களால் மக்களை கிச்சு கிச்சு மூட்டினார். ஆனாலும் எவ்வளவு நாள்தான் இப்படியே போகும்.

tamil cinema 90

தடாலடியாக உள்ளே நுழைந்தனர் சினிமா கல்லூரி மாணவர்கள், அதுவரை டாகுமெண்டரி படங்களையே எடுத்துவந்த அவர்கள் நாங்களும் சினிமா எடுப்போம் என எடுத்துக்காட்டினர் “ஊமைவிழிகள்

இப்படத்தை பார்த்து பயப்படதாவர்களே இருக்க முடியாது எனலாம். அந்த அளவிற்கு புதிய முயற்சியாகவும் புதிய கதையாகவும் இருந்தது. இப்படத்தின் மூலம் “ஆபாவாணன் குழு” நல்ல பெயர் பெற்றது, அதில் இருந்து வந்த ராஜசேகர் முன்னணி இயக்குனராகவும் வலம் வந்தார்.90’s Tamil Cinema தனி பெயர் பெற்றது.

90’s Tamil Cinema  வில் இயக்குனர் பிரதாப்பொத்தன் நடிப்பில் கவனம் செலுத்தினார். பல படங்களில் அவர் முகம் வந்துபோகும்.

  • தமிழின் முதல் சாம்பி (zombie)திரைப்படம் “நாளைய மனிதன்”

tamil movie as 90

அப்போ “மிருதன்” இல்லையானு கேட்டால். இல்லை என்பதுதான் பதில்.

இயக்குனர் வேலு பிரபாகரன் புது முயற்சியாக ஆங்கில தழுவலான PSYCHO-வில் இருந்தது கதை எடுத்து இயக்கிய படம் “நாளைய மனிதன்

சிறியவயதில் SUN TV யில் அதிகம் பார்த்து ரசித்த படம். இதன் அடுத்தபாகமாக வெளியானது “அதிசயமனிதன்” ஆனால் படம் சொல்லிகொள்ளும்படி இல்லை. இதன் மூன்றாம் பாகமாக எலும்புமனிதன் வருமென அறிவிப்பு வெளியானது.(என்னாச்சின்னு தெரியல)

  • பாம்புகள் பற்றிய திரைப்படங்கள் அந்நேரத்தில் நன்றாக ஓடியது.

shooting

பாம்புகள் பற்றிய எல்லா படங்களிலும் ஒரே கதைதான் ஆனாலும் எல்லா படமும் நன்றாக ஓடியது. அர்ஜுன், கார்த்திக், கமல்ஹாசன் போன்றோர்களும் இப்படங்களில் நடித்தனர்.

90 காலகட்டத்தில் ஹிந்தி பட ரீமேக் குறைந்துவிட்டாலும் ஆங்கில பட தழுவல் அதிகமாக ஆரம்பித்தது. அதில் சில படங்கள் மறக்கமுடியாதவையாக அமைந்தன.

To Be Continue@ Next Part

இதன் முந்தைய பாகங்கள் படிக்க PART 1 & PART 2

 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments