Saturday, November 30, 2024
Homeசினிமாசினிமா! | A Untold Story of Tamil Cinema | Part 5

சினிமா! | A Untold Story of Tamil Cinema | Part 5

90’s Tamil movie

சென்ற அத்தியாயத்தில் (90’s Tamil Movie)சொன்னதுபோல் புதிதாக வந்த நடிகர்களால் முன்னணி நடிகர்களின் மார்க்கெட் சரியாய் ஆரம்பித்த நேரம். சினிமா கல்லூரி மாணவர்கள் வருகை குறைந்துகொண்டே இருந்தது.

90’s Tamil Movie கட்டத்தில்  குடும்பத்துடன் பார்க்கவேண்டிய கிராமத்து காதல் கதைகள், பேய் படங்கள் வர தொடங்கின.

90’s Tamil movie

 

சரத்குமார், முரளி, விஜயகாந்த், மோகன் போன்றோர் தன் மார்க்கெட்டை நிலை நிறுத்திக்கொள்ள குடும்ப கதைகளை தேர்தெடுத்து நடித்தனர். அதில் நடிகர் மோகன்னின் திரைவாழ்க்கை முடிவடையும் என யாரும் எதிர்பார்க்காத ஒன்று ஏற்கனவே 2, 3 வருடங்களாக ஓடாத படங்களை கொடுத்த மோகன் “உருவம்” என்ற பேய் படத்தில் நடித்தார். அந்த படத்தில் கோரமாக முகத்துடன் தோன்றிய மோகனை மக்கள் ஏற்கவில்லை.அதற்க்கு பின் சினிமாவும் அவரை ஏற்கவில்லை.

  • பலப்படங்களில் மோகன்க்கு குரல் கொடுத்தது சுரேந்தர்

ராம்கி, அருண்பாண்டியன் போன்றோர் அதற்க்கு பின் கல்லூரி மாணவர்களை குறிவைத்து படங்களை கொடுத்தனர்.

90’s Tamil movie

அந்நேரத்தில் மணிவண்ணன் என்ற ஒருவர் மர்மமான கதைகள் கொண்ட படங்களை எடுத்து சத்யராஜை நல்ல நடிகராக முன்னிருத்திகொண்டு இருந்தார்.

கமல் தனகென்று ஒரு பாணியை உருவாக்கிக்கொண்டு இருந்தார். சிங்காரவேலன், அபூர்வ சகோதரர்கள், குணா என்ற ஆங்கில தழுவல் கதைகளை எடுக்க முயன்றார்

 

  • முதன் முதலில் Apple Computer காட்டப்பட்ட திரைப்படம் “விக்ரம்

அந்நேரத்தில் பாலுமகேந்திரா திரைப்படங்களின் சாயல் பல படங்களில் இருந்தது. கார்த்திக், பிரபு, சரத்குமார் போன்றோர் நல்ல கதைகளை தேர்ந்தேடுத்து கொடுத்தனர்.

விஜய், அஜித் படங்கள் அதிகம் ஓட ஆரம்பித்த நேரம் பிரசாந்த் என்ற நாயகன் இவர்களுக்கு போட்டியாக சென்றுகொண்டு இருந்தார். பிரசாந்த் படம் வெளியிடு என்றாலே மற்ற நடிகர்கள் படம் வெளியாக பயந்தது.

90’s Tamil movie

விஜயகாந்த் தன்னை தானே மக்களை காப்பாற்றும் வீரன் என சொல்லிக்கொண்டு இருந்த நேரம்…அர்ஜுன் இயக்குனர் அவதாரம் எடுத்து தான் போலீஸ் என நம்பவைத்தார்.

அதற்க்கு பின் அர்ஜுன், விஜயகாந்த் படங்கள் நாட்டுபற்றை அள்ளி தெளித்துக்கொண்டு இருந்தது.

  • ஷங்கருக்கு முன் பிரம்மாண்ட படங்களை எடுத்தது இயக்குனர் பவித்ரன்

இயக்குனர் பவித்ரனிடம் இருந்து ஷங்கர் என்ற புதுமுக இயக்குனர் 1993 ல் தமிழ்சினிமாவில் நுழைந்தார். அதுவரை யாரும் எடுக்க துணியாத கதையாக வெளியானது ஷங்கர் இயக்கத்தில் “ஜென்டில் மேன்”

பட்டிதொட்டி எங்கும் படம் சக்கைபோடு போட்டது. யார் இந்த பையன் என்று அரசாங்கமே திணறியது.

அதை தொடர்ந்து பல தயாரிப்பாளர்கள் ஷங்கரை மொய்க்க அவர் அடுத்த கதைக்காக யோசிக்க தொடங்கினார்.

என்னதான் இயக்குனர் மகனாக இருந்தாலும் விஜய் என்ற நடிகர் மக்களுக்கு தெரிய இன்னொரு முன்னணி நடிகரை விஜயுடன் களம் இறக்க வேண்டும் என யோசித்த S.A சந்திரசேகர் விஜயகாந்துடன் விஜயை களம் இறக்கினார். படம் வசூல் வெற்றி. ஆனால் விஜய்?

To Be Continue @ Next Part

இதன் முந்தைய பாகம் படிக்க : part 4

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments