Wednesday, October 16, 2019

90’s Kids Movie memory’s | அதெல்லாம் ஒரு காலம்

Tamil News

90’s Kids Movie memory’s இது முழுக்க முழுக்க 90’s கிட்ஸ் காண பதிவு மட்டுமே. சினிமா உலகம் அவர்களுக்கு எவ்வளவு நெருக்கமானது என சொன்னால் அதை சிறு துளைக்குள் யானையை தேடும் கதைதான்.

பக்கத்து வீடு எதிர் வீடு என அனைவரையும் அழைத்துவந்து வெள்ளிகிழமைகளில் ஒலியும் ஒலியும் பார்த்தவர்கள் நாம் மட்டுமே. பொதிகை டிவியின் ஆதிக்கம் அதிகம் இருந்த காலம்.

இப்பொழுதான் அவேஞ்சர்ஸ் அப்பொழுதெல்லாம் சக்திமான்தான் நாம் பார்த்த முதல் சூப்பர் ஹீரோ.

அப்படியே சினிமா பக்கம் வந்தால். எல்ல விதமான காதல் படங்களும் கலந்துகட்டி ஆண்களை ஆண் தேவதைகளாக, அநியாயத்திற்கு நல்லவர்களாக காட்டிய காலக்கட்டம். கல்லூரி ஆண்கள் பெண்கள் அனைவரும் படத்தில் வரும் காதல் கதையை தங்களுக்கு பொருத்தி மனதிற்குள் ஓட்டி பார்த்த காலக்கட்டம் அது.

ஆண்களுக்கு ஊர்வசி பாடலும், பெண்களுக்கு ஷக்கலக பேபி ஷக்கலக பேபி பாடலும் காதலர்களுக்கு ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே என்ற பாடலும் திகட்டாத இன்பத்தை தந்தது.

காதல் இளைய தளபதியை முதல் முதலில் கண்டவர்களும் நாம் தான். விஜய் வளர்ந்து வந்த காலகட்டம், தல அஜித்தும் அப்படியே. இன்று வெளியாகும் பாடல்களில் சில என்ன வார்த்தை என்றே தெரியவில்லை. ஆனால அன்று.

(நாளை உலகம் இல்லை என்றால்..அழகே என்ன செய்வாய்-Love birds) (நலம் நலம் அறிய ஆவல் உன் நலம் நலம் அறிய ஆவல்.-காதல் கோட்டை) (மீசக்கார நண்பா உனக்கு ரோசம் அதிகம்டா-நட்புக்காக) (ஆனந்தம் ஆனந்தம் பாடும் – பூவே உனக்காக) போன்ற பாடல்கள் இன்று கேட்டாலும் எங்கோ ஒரு மூலையில் பழைய நினைவுகள் நிச்சயம் தாலாட்டி செல்லும்.இன்று விஜய் அஜித் என்று சண்டை போட்டு கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு மத்தியில் அன்று பிரசாந்தா? விஜய்யா? பிரசாந்தா? அஜித்தா? என்று போட்டிபோட்டுக்கொண்டு இருந்தனர். நண்பர்களுக்கு ஆயிரம் பாடல்கள் வந்தாலும்- ஈஸ்வரா வானும் மண்ணும் Friendship ஆனது உன்னால் ஈஸ்வரா பாடல்தான் என்றும் மனதில் நிற்பவை.

அந்த பாடலில் ஒரு பாடல் வரி போலதான் படம் முடியும். (மாடர்ன் உலகத்திலே எல்லாமே மாறி போகட்டுமே நட்பின் கற்பு மட்டும் எந்நாளும் மாறாதிருகட்டுமே) இந்த வரி அன்றைய கல்லூரி இளசுகளை யோசிக்க வைத்தது. படத்தில் வருவது போல நண்பனுக்கு தன் தங்கையை கட்டிகொடுத்த சம்பவம் எல்லாம் அரங்கேறியது தனி தகவல்.)

எல்லா டெக்னாலஜி வளர்ச்சியும் முழுதாக பார்த்த நபர்கள் 90’s கிட்ஸ் மட்டுமே நோக்கியா 100 வில் தொடங்கி இன்று Triple camera redme வரை நாம் பார்த்துள்ளோம் என்பது இன்று பெருமைபடவேண்டிய ஒன்று.

இன்று எந்த படத்தில் எந்த ஹீரோ என்றே தெரியவில்லை ஆனால் அன்று ஒரு காட்சியை வைத்தே இது எந்த படம் எந்த ஹீரோ என தெளிவாக சொல்லும் அளவிற்கு நாம் அனைத்திலும் புத்திசாலியாகத்தான் இருந்தோம் 2K வில் பிறந்த ஒருவனிடம் மூன்று தொலைபேசி எங்களை கேளுங்கள் தெரியாது என்று போனில் பதிவு செய்து வைத்திருப்பான்.

காலங்கள் ஆயிரம் கடந்தாலும் கடந்த காலங்கள்தான் நம்மை வழிநடத்தி செல்லும் வழிகாட்டி. 90’s கிட்ஸ் என்பதில் பெருமை கொள்வோம்

Next Topic