Saturday, November 30, 2024
Homeசினிமாசினிமா! | A Untold Story of Tamil Cinema | Part 6 |

சினிமா! | A Untold Story of Tamil Cinema | Part 6 |

                     20’s Tamil Movies அறிமுகம்

20’s Tamil Movies என்ற வாக்கியம் பல நாயகர்களுக்கு முற்றுபுள்ளியாக அமைந்தது எனலாம்.

80, 90 காலகட்டத்தில் வெற்றிவாகை சூடி வலம் வந்த பாரதிராஜா, பாக்யராஜ் போன்றோர் இடம் தெரியாமல் சென்றனர்.

20's tamil movies

அந்நேரம் சுந்தர்.C, P.வாசு, ஷங்கர், பவித்ரன், K.S ரவிக்குமார், விக்ரமன் போன்றோர் தனித்துவமான கதையில் மசாலாக்களை தூவி மக்களுக்கு பிடித்தவகையில் கொடுத்தனர். நாட்டாமை, படையப்பா போன்ற படங்கள் பட்டிதொட்டியெங்கும் K.S ரவிக்குமார்க்கு புகழை சேர்த்தது. நடிகர் விஜயகுமாரின் மகன் அருண்விஜய் தடாலடியாக சினிமாவில் நுழைந்து தானும் இருக்கிறேன் என நம்பவைக்க முயன்றுகொண்டு இருந்தார்.

20's tamil movies

ஆனால் ஆபாவாணன் குழு 1995 ல் கருப்புரோஜா படத்தோடு Goodbye சொல்லி சென்றது. (இணைந்த கைகள், செந்தூர பூவே படங்களை மறக்க முடியுமா!)

விஜயின் தொடக்ககாலத்தில் விஜய் முகமேனும் மக்களுக்கு பழக வேண்டும் என விஜயகாந்த்தோடு செந்தூரபாண்டி படத்தில் நடிக்க வைத்தார் அவர் அப்பா.

அதற்க்கு பின் வந்த சில படங்கள் ஓடவில்லை. அப்பொழுதான். முதல் வசந்தம் படத்தில் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்கவைத்த விக்ரமன் இயக்கத்தில் விஜய் நடிக்க பூவே உனக்காக வெளியானது.

padaayappaa

விஜய் என்ற நடிகர் இருப்பது பலருக்கு அப்பொழுதான் தெரிந்தது 200 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. ஆனால் போட்டி இல்லாமல் இருக்குமா அஜித், அப்பாஸ், பிரசாந்த் போன்றோர் வேகமாக வளர்ந்தது கொண்டு வந்தனர்.

T. ராஜேந்திரன், பாண்டியராஜ் போன்றோர் கடைசிகட்ட முயற்சியில் நின்றுகொண்டு இருந்தனர். 1999 ஆம் ஆண்டு அனைவரும் போட்டிபோட்டு படங்களை கொடுத்தனர்.

20's tamil movies

T. ராஜேந்திரன் – மோனிஷா என் மோனலிசா

பாண்டியராஜ்- மனைவிக்கு மரியாதையை, சுந்தரி நீயும் சுந்தரன் நானும்.

பார்த்திபன்- House full

கார்த்திக் – சின்னராஜா, நிலவே முகம் காட்டு, ரோஜாவனம், உனக்காக எல்லாம் உனக்காக,

ஆனால் இவர்களுக்கு மத்தியில் இருப்பவர்கள் அடுத்தகட்ட வெற்றியை காண தொடங்கினர்.

விஜய் – துள்ளாத மனமும் துள்ளும். நெஞ்சினிலே, மின்சாரகண்ணா

அஜித்- தொடரும், வாலி, உன்னைத்தேடி, அமர்க்களம்.

விக்ரம் – சேது

சூர்யா – பூவெல்லாம் கேட்டுப்பார்

2000 மாவது வருடத்தை வரவேற்க தயாராக இருந்தது தமிழ் சினிமா.

  • 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் “சுயம்வரம்”

14 இயக்குனர்கள்  19 கேமராமேன்கள், 12 நாயகர்கள், 10 நாயகிகள் என கின்னஸ் சாதனை படைத்த படம் “சுயம்வரம்

அடுத்த கட்ட படங்கள் Trend யே மாற்றின எனலாம். ஆனால்?

To be Continue @ Next Part

இதன் முந்தைய பாகங்கள் படிக்க : Part 5

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments